சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் உட்பட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை..
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி வெங்கடசுப்பா ரெட்டியார் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்,பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் மீனவ நிர்வாகிகள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மீனவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments